இந்திய மீனவப் படையெடுப்புகள் வடக்கில் தீவிர மோதலை ஏற்படுத்தும் அறிகுறிகள் .வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள். உதவிக்கு வந்த இலங்கை கடற்படை!
இந்திய மீனவப் படையெடுப்புகள் தீவிர மோதலை ஏற்படுத்தும் அறிகுறிகள்… வடக்கு மீனவர்களது ஒன்றரை மில்லியன் பெறுமதியான வலைகளை அறுத்த இந்திய மீனவர்கள் . உதவிக்கு வந்த இலங்கை கடற்படை!
யாழ்ப்பாணம் வெத்திலைக்கேணி கடல் பகுதிக்கு நேற்று (24) அனுமதியின்றி வந்த சுமார் இருபது இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைந்து , யாழ் மீனவர்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட வலைகளை அறுத்து அழித்துள்ளன.
இது தொடர்பில் யாழ் மீனவர்கள் யாழ்.வெட்டிலக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , மீனவர்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராமேஸ்வரம் மீனவர் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தால், இந்திய மீனவர்கள் வடக்கடலுக்கு வலுக்கட்டாயமாக செல்வது ஆறு நாட்களாக நிறுத்தப்பட்ட போதிலும் , அவர்கள் போராட்டத்தை கைவிட்டவுடனேயே அவர்களின் வருகையின் முதல் நாளிலேயே இந்த அழிவு இடம்பெற்றுள்ளது.
இந்திய மீனவர்கள், தமது மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களை அழித்துக் கொண்டிருந்த போது , அதை அவதானித்த இலங்கை கடற்படையின் படகு ஒன்று , சம்பவ இடத்தை நோக்கி வந்து , இந்திய மீனவர்களின் படகுகளை துரத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்போம் என யாழ்ப்பாண மீனவர்கள் தெரிவித்தனர்.
More News …
ஜனாதிபதி தலைமையில் 28, 29 இல் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்!
ஜூலையில் நாடாளுமன்றம் கலைப்பு?
நுவரெலியாவில் இன்று குதிரை ஓட்டப் போட்டி!
யாழில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!
இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!
சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை – 4 பேர் கைது!
இலங்கை இந்தியாவின் பிராந்தியமா? – ஹரினின் கருத்துக்கு சு.க. கடும் கண்டனம்.
பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!
தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.
ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!
கச்சதீவு திருவிழாவில் 4 ஆயிரம் இலங்கையர்கள் பங்கேற்பு! – இந்தியர்கள் புறக்கணிப்பு.
விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!
200 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்! பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்
புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி