ஒருதலைக் காதல் விவகாரம்: தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் வெட்டிக்கொலை!

பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் நேற்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சந்தேகநபரான 21 வயது இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.