கொழும்பில் துப்பாக்கிச்சூடு! 54 வயதான நபர் படுகாயம்!!

கொழும்பு, கொச்சிக்கடை – ஜம்பட்டா வீதியில் இன்று (25) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த 54 வயதான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களைத் தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.