யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்று தீக்கிரையாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடையிலுள்ள வெற்றுக் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.
வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவே அனர்த்தத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.