யாழ். பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த இரண்டு பொலிஸார் கைது.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிஸாரே இவ்வாறு செயற்பட்டமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.