‘பேக் ஐடி’யில் ஆணாக வலம் வந்து 15 வயது சிறுமியைக் காதலித்த 19 வயது யுவதிக்கு விளக்கமறியல்.

சமூக வலைத்தளங்களில் இளைஞர் போல் நடித்து, 15 வயது சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு, அவரது நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டார் எனக் கூறப்படும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியாவார்.
இவர் சமூக ஊடகத்தில் அறிமுகமான மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தன்னை இளைஞராகக் காண்பித்து கடந்த ஒரு வருட காலமாகக் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவரின் குரலில் தொலைபேசி மூலம் சிறுமியுடன் தினமும் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
இந்தச் சிறுமி தனது காதலனாக நினைக்கும் சந்தேகநபரான யுவதிக்கு தனது நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த யுவதி, சிறுமியை நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால், இந்தச் சிறுமி, யுவதியை நேரில் சந்திப்பதைத் தவிர்க்க முற்பட்டுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட யுவதி தன்னைச் சந்திக்க வரவில்லை என்றால் சிறுமியின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து விடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.
ஆனாலும், மேற்படி சிறுமி, யுவதியை நேரில் சந்திப்பதைத் தவிர்க்க முற்பட்டதால் இந்த யுவதி சிறுமியின் நிர்வாணப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேகநபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோதே அவர் ஆண் இல்லை பெண் ஒருவர் எனப் பாதிக்கப்பட்ட சிறுமி அறிந்துகொண்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More News
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்.
சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்.
குடாநாட்டில் அண்மையில் இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்.
யாழ். நகரில் மோட்டார் சைக்கிளைத் திருடி தீக்கிரையாக்கிய நபரைத் தேடும் பொலிஸ்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி
யாழ். பொலிஸ் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த இரண்டு பொலிஸார் கைது.
‘புலதுசி’ கடுகதி ரயில் மோதி இளைஞர் சாவு.
யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!
மாணவர்கள் புரிந்துகொள்ளவே இஸ்ரேல்-ஹமாஸ் பாடங்கள் : சிங்கப்பூரின் கல்வி அமைச்சர்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி!
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!
தில்லி நெடுஞ்சாலையில் டிராக்டர் சங்கிலிப் போராட்டம்!
எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க
அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!