வெஸ்ட்பக் வங்கிக்கு அபராதத் தொகை.

விசாரணையின் முடிவில் Westpac வங்கிக்கும் AUSTRAC எனப்படுகின்ற Australian Transaction Reports and Analysis Centre-க்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
19.6 மில்லியன் தடவைகள் Westpac வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுமார் 11 பில்லியன் டொலர்கள் பெறுமதியான முறைப்பாடு செய்யப்படவேண்டிய – பணப்பரிவர்த்தனைகள் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தவறியதாகவும், இதன் மூலம் சுமார் 23 மில்லியன் தடவைகள் வங்கி விதிகளை Westpac மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.