ககன்யான் திட்டம்: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் – அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) நிலவை ஆய்சு செய்யும் சந்திரயான் 3 திட்டம், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 திட்டங்களில் வெற்றியடைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ இறங்கியுள்ளது. அதற்காக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர். இந்த தகவல்களை இஸ்ரோ ரகசியமாக வைத்திருந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் கேட்டறிந்தார்.
பின்னர் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அறிமுகம் செய்து கவுரவித்தார். அதில், விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரசாத், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அடையாள பட்டையையும் பிரதமர் மோடி வழங்கினார்.
மேலதிக செய்திகள்
புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழில் விசர் நாய் கடித்து இளைஞர் ஒருவர் மரணம்.
கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது!
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும்! – சபாநாயகர் சூளுரை.
இன்று மாநிலங்களவை தேர்தல் – மாற்றி வாக்களிக்கும் MLA’க்கள்? உச்சகட்ட பரபரப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!
‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…