எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தைச் சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
உத்திக பிரேமரத்ன 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விமல் வீரவன்ச தலைமையில் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாகச் செயற்படும் குழுவில் தற்போது உத்திக பிரேமரத்ன செயற்பட்டு வருகின்றார்.
பிரபல நடிகருமான இவரை இலக்கு வைத்து கடந்த செப்டெம்பர் மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.