வெள்ளவத்தையில் ஹோட்டல் ஒன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 5.20 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா வீதி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அந்தக் ஹோட்டலை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், எவரையேனும் பயமுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தில் ரி – 56 வகை துப்பாக்கி ரவைகள் 9 மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்தக் ஹோட்டலில் எவரும் தங்கியிருக்காத நிலையில், ஹோட்டலின் சுவர் மற்றும் இரும்புத் தூண் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
More News
புத்தூரில் வீடொன்று தீக்கிரை.
எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.
காணாமல்போன குடும்பஸ்தர் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!
ககன்யான் திட்டம்: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் – அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…
‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!
புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.