ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ரயில் (Video)
இந்தியாவில் ஓட்டுநர் இல்லாமல் ஒரு சரக்கு ரயில் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடியது தெரியவந்துள்ளது.
அந்த ரயில் பல்வேறு ரயில் நிலையங்களை அதிவேகத்தில் கடந்து செல்லும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா நகரிலிருந்து பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் பகுதி வரை அந்த ரயில் ஓட்டுநரின்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நேற்று (26 பிப்ரவரி) காலை அந்தச் சம்பவம் நடந்ததாக BBC செய்தி நிறுவனம் சொன்னது.
ரயில் நிறுத்தப்பட்டதாகவும் யாரும் காயமடையவில்லை என்றும் இந்திய ரயில்துறை தெரிவித்தது.
கதுவாவில் ரயில் நின்றபோது ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் ரயிலிலிருந்து வெளியேறினர்.
அப்போது ரயில் நகரத் தொடங்கியதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அது ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது.
ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
மேலதிக செய்திகள்