விமானத்தில் எலி, மூன்று நாட்கள் விமானம் நிறுத்தப்பட்டது.
இலங்கையின் தேசிய விமான நிறுவனமான SriLankan Airlines , விமானம் ஒன்று 3 நாள்களுக்குச் செயல்படாததற்கு எலியைக் காரணம் காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வந்துகொண்டிருந்தபோது SriLankan Airlines A330 விமானத்தில் எலி ஒன்று காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து விமானம் 3 நாள்களுக்கு கொழும்பில் (Colombo) நிறுத்தப்பட்டது.
எலி விமானத்தின் முக்கியப் பகுதிகளைக் கடித்துச் சேதப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய விமானம் முழுதும் தேடப்பட்டது.
கடைசியில் அந்த எலி மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகுதான் விமானம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
ஆயினும் மூன்று நாள்கள் விமானம் பறக்காததால் பயண அட்டவணையில் பெரிய குளறுபடி ஏற்பட்டதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகியுள்ள நிலையில் , சென்ற ஆண்டு (2023) SriLankan Airlines, 1.8 பில்லியன் டாலருக்கு மேல் இழந்தது.
மேலதிக செய்திகள்
சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்!
முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!
ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ரயில் (Video)
முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!
கடலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் சிங்கப்பூரின் ஆலை.
விமானத்தில் எலி, மூன்று நாட்கள் விமானம் நிறுத்தப்பட்டது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி பரிந்துரைகள் இன்று…
ஹெரோயினுடன் பாடசாலை ஆசிரியர் கைது!
திருப்பூர் பல்லடம் நிகழ்ச்சியில் பரபரப்பு – பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு…!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு