வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு ஏற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை.
வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு ஏற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் முதலீட்டு சூழலை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பான ‘சீன மாநில கவுன்சில் முன்மொழிவு’ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதில் சுறுசுறுப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்தும் அதிக நன்மைகளை வழங்குவதாகவும் சீன வர்த்தக அமைச்சில் நேற்று (28) இடம்பெற்ற வெளிநாட்டு முதலீட்டு வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
சீன-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், சீனா-ஐரோப்பா வர்த்தக சம்மேளனம் மற்றும் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வணிகங்கள் உட்பட சீனாவின் வெளிநாட்டு வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் இணைந்தனர். வணிகச் சூழலை மேம்படுத்த சீன அரசின் பாரிய முயற்சிகளை அவர்கள் பாராட்டினர். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை சீனா வெற்றிகரமாக வென்றுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.