சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டக் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் ஆற்றிய உரை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55வது அமர்வின் உயர்மட்ட கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ காணொளி மூலம் கலந்து கொண்டார். 26ஆம் தேதி பெய்ஜிங்கில் இருந்து நடத்தினார்.
உலக மனித உரிமைகள் நிர்வாகத்தில் தற்போது கடுமையான நெருக்கடி நிலவுவதாக வாங் யி அங்கு கூறினார். அபிவிருத்தி நடவடிக்கைகளில் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்ற போர்வையில் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டும். பல்வேறு நாடுகள் சுதந்திரமாக தெரிவு செய்யப்பட்ட மனித உரிமை மேம்பாட்டுப் பாதைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக மனித உரிமைகள் நிர்வாகத்தில் சீனா தீவிரமாக பங்கேற்கிறது. தனது நவீனமயமாக்கல் சாதனைகளின் பலனை ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகவும் நியாயமாக வழங்கி வரும் சீனா, மனித உரிமைகளை பாதுகாக்கும் நிலையை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.