மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்க நடவடிக்கை
புத்தகப் பையின் எடையால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக சுகாதாரத் துறையினர் நிரூபித்துள்ளனர்.
இதன்படி, மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவர்களின் புத்தகப் பைகளின் சுமையைக் குறைக்கும் வகையில், மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைத் தவிர ஏனைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதைக் குறைப்பதற்கு அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். .
கல்வி அமைச்சு ஊடக மையம்