பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!
பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தில்லி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
பெங்களூரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் குண்டுவெடிப்பு சம்பம் நிகழ்ந்தது. இதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதச் செயல் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நெரிசலான பகுதிகளில், குறிப்பாக தில்லியின் சந்தைகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேசத்திற்கிடமான செயலை கண்டறிந்தால், உடனே உள்ளூர் காவல் நிலையங்களை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சந்தை சங்கங்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தில்லி காவல்துறை வெடிகுண்டு செயலிழக்கும் குழுக்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்களை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் சனிக்கிழமையன்று குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
மேலதிக செய்திகள்
3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்
சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி