நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் உறவுகளிடம் கையளிப்பு!
நீர்கொழும்பு வைத்தியசாலையில் மீள் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை நிறைவு பெற்ற பின்னர் சாந்தனின் பூதவுடல் இன்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஈழத்தமிழன் சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் பூதவுடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றுப் பகல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பூதவுடலைப் பெறுவதில் தாமதம் நிலவியது. நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடலை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் மாலை வேளையிலேயே மீள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குப் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
பூதவுடலை நேற்று இரவு பார்வையிட்ட நீர்கொழும்பு நீதிவான், சாந்தனின் இரத்த உறவுகள் இருவர் முன்னிலையில் மீள் மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னரே மீள் உடற்கூற்றுப் பரிசோதனையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதற்கமைய இன்று பகலே மீள் மரண விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீள் உடற்கூற்றுப் பரிசோதனையை நடத்துவதில் நீர்கொழும்பு வைத்தியசாலை நிர்வாகம் தாமதம் காட்டியது.
எனினும், சகல பரிசோதனைகளும் நிறைவு பெற்று பூதவுடல் இன்று மாலை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று சாந்தனின் சகோதரன் மதிசுதா தெரிவித்தார்.
சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலதிக செய்திகள்
முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் மரணம் – இருவர் படுகாயம்.
மைத்திரியின் புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பம்!
சமன் ரத்நாயக்கவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
முட்டைக்கும் விரைவில் கட்டுப்பாட்டு விலை!
மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா? – இன்னமும் முடிவில்லை என்கிறார் காமினி லொக்குகே.
3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்
சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி