உயர்தர மாணவர்களுக்கான கல்விசார் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.
உயர்தர மாணவர்களுக்கான கல்விசார் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.
முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தினால் வெலிஓயா சம்பந் நுவர வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களிற்கான கல்விசார் தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு செயற்றிட்டம் 24.09.2020 வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த செயலமர்வில் மாணவர்கள் பாடத் தெரிவுகளை மேற்கொள்ளும் முறைகள், கல்வியில் அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், உயர் கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளத் தேவையான கல்வி சார்ந்த தொழில் வழிகாட்டல்கள் தொடர்பான விடயங்கள் தொழிலுக்கான திறவுகோல் ஆய்வினூடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இச் செயலமர்வில் தரம்12 மற்றும் தரம் 13ஐ சேர்ந்த 50 மாணவர்கள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.