எங்கள் மீது நம்பிக்கை கொண்டதற்கு நன்றி…மனமுருகி பேசிய இஷா அம்பானி..!
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் முதல் நாள் விழாவில் பேசிய இஷா அம்பானி, எங்கள் குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பதற்கு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கி இன்று( மார்ச் 3) வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். அம்பானி குடும்பத்தினரின் வரவேற்புரையுடன் மார்ச் 1 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், ‘An Evening in Everland” என்ற தலைப்பில் முதல் நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
இரண்டாம் நாள் Mela Rouge என்ற கருப்பொருளுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இருவரை வாழ்த்தி இஷா அம்பானி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில், நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல் பாடி அசத்திய ஷிபானி தண்டேகர் முதலில் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தங்குவதற்கு எந்தவிதமான வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் என தெரியாமல் வருகை தந்த விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார் இஷா அம்பானி. “ என் சகோதர் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் மகிழ்ச்சிகரமான நாளில் இங்கு கூடி கொண்டாடுவதற்காக வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் மனமார்த்த நன்றி. இங்கு தங்குவதற்கு எந்தவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூகுளில் கூட தேடமுடியாது. அப்படியும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கொண்டாட்டத்திற்கு வந்திருப்பது மிக பெரிய விஷயம்” என பேசினார். ஜாம்நகர் என்பது எங்கள் வீடு போன்றது. எங்கள் குடும்பத்திற்கு மிக முக்கிய சிறப்பு இடம் என கூறி உரையை நிறைவு செய்தார்.
மேலதிக செய்திகள்
சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்களின் அஞ்சலிக்கு : நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்
அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராகிறார் ரணில்..
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னையில் ஏர்டெல் சேவை திடீர் முடக்கம்.. பொதுமக்கள் கடும் அவதி