கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முற்பணக் கொடுப்பனவு.

கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான முற்பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை(21) மற்றும் செவ்வாய்க்கிழமை(22) அன்று இடம்பெற்ற கடும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 14 வீடுகளுக்கான முற்பணக் கொடுப்பனவு மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (24.09.2020) புதுக்குடியிருப்பு(08), ஒட்டிசுட்டான்(02), வெலிஓயா(02), துணுக்காய்(01), கரைதுறைப்பற்று(01) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 14 வீடுகளுக்கான காசோலைகளை குறித்த பிரதேச செயலகங்களில் வைத்து பதவி நிலை உத்தியோகத்தர்களால் வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.