தற்பொழுது நிலவும் உர தட்டுப்பாடு இரண்டு வாரத்திற்குள் தீர்க்கப்படும்.

உர தட்டுப்பாடு இரண்டு வாரத்துக்குள் தீர்க்கப்படும்.
நாட்டில் தற்பொழுது நிலவும் உர தட்டுப்பாடு இரண்டு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று காலை கூடிய போது பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க உர பிரச்சினை தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
நாட்டில் தற்பொழுது 120,610 ஏக்கர் வயல் நிலத்தில் தற்பொழுது உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 10 இலட்சத்து 5,100 வயல் காணியில் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாய துறையை மேம்படுத்துவதற்காக அடுத்த வருடத்தில் நாடு முழுவதிலும் விவசாய உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் கீழ் ஒரு விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு தலா 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.