ஊழியர்களை அலுவலகம் வரச் சொல்லும் டாப் 10 நிறுவனங்கள்
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பளித்த நிறுவனங்கள், தற்போது, வாரத்தில் குறைந்தது 3 நாள்களாவது அலுவலகம் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
வீட்டிலிருந்து வேலை என்ற வாய்ப்பின் காரணமாக, சொந்த ஊர்களுக்கேச் சென்றிருந்த பல ஊழியர்கள் தற்போது அலுவலகத்துக்கு அருகே குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில முக்கிய முன்னணி 10 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வந்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனவாம்.
அதில் முதல் இடத்தில் இருப்பது டிசிஎஸ். மார்ச் 31ஆம் தேதி முதல் ஊழியர்கள் வாரத்தில் 3 நாள்கள் அலுவலகம் வந்தே ஆக வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நடவடிக்கையை சந்திக்க வேண்டியது வரும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
அடுத்து இன்போசிஸ்.. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 நாள்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும்என்றும், அல்லது வாரத்தில் மூன்று நாள்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவத்திருக்கிறது. குழுவாக இணைந்து பணியாற்றுவதால் கிடைக்கும் லாபத்தை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
எச்சிஎல் டெக் நிறுவனமும், வாரத்தில் மூன்று நாள்கள், ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் நேரில் வந்து பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் ஒழுங்க நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
அலுவலகம் வாருங்கள் இல்லாவிட்டால் நடவடிக்கை என்று விப்ரோவும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோல, காக்னிசென்ட், அமேசான், மெட்டா, கூகுள், ஐபிஎம், டெல் உள்ளிட்ட நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்றும், குறைந்தது வாரத்தில் மூன்று நாள்கள் அலுவலகத்தில்தான் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
மேலதிக செய்திகள்
நாட்டை அதிரவைத்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு