ஆதிவாசிகளின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளை பாதுகாக்க நடவடிக்கை

ஆதிவாசிகளின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளைகளையும் அவர்களுடைய பாரம்பரிய கலை கலாசார முறைகளையும் வளப்படுத்திப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், மஹியங்கனை, டம்பான ஆதிவாசிகளின் கிராமத்திற்கு விஜயம் செய்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஆதிவாசி மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமது பரம்பரையைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆதிவாசிகளின் தலைவர் ஆளுநர் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அத்துடன் ஆதிவாசிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ ஆளுநர் முஸம்மில் அவர்களுக்குக் கையளித்தார். இதன்போது ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ஆதிவாசிகளின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட ஆளுநர் அவர்களுக்கு, ஆதிவாசிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியின் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பின்னர் யானை தாக்குதலில் உயிரிழந்த ஆதிவாசி ஒருவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கலந்துகொண்டார்.
இந்த விஜயத்தின் போது ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பென்வெல, மஹியங்கனை பிரதேச சபையின் தலைவர் வை. எம். கரு வீரரத்ன, ஆளுநரின் பாரியார் பெரோஸா முஸம்மில் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.