அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் எலோன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அறிக்கைகள் காட்டுகின்றன.
எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.