மைத்திரி போட்டியிட்ட சின்னத்தில் ரணிலும் களமிறங்க முடிவு? – சிங்கள ஊடகம் தகவல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அன்னம் சின்னத்திலேயே களமிறங்குவார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காகப் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டு வருகின்றது எனவும், நிமல் லான்சா தரப்பு, மொட்டுக் கட்சியின் சுயாதீன தரப்பு உட்படப் பலரும் ரணிலை ஆதரிக்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
மே தினக் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்தி மெகா கூட்டணியை மக்கள் முன்னனிலையில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.