நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம் – எங்கு தெரியுமா?
இந்தியாவில் முதன்முறையாக, கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ஹூக்ளி நதியின் கிழக்கு மற்றும் மேற்கு கரையை இணைக்கும் வகையில் நீருக்கு அடியில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்றது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம், நீருக்கு அடியில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக அமைந்தது.
பின்னர், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீருக்கு அடியில் ஹவுரா மெய்டன் மற்றும் எஸ்பிளனேட் இடையிலான ரயல்வழித்தடமும் திட்டமிட்டப்படி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா மெட்ரோ ரயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் சுமார் 7 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.
மேலதிக செய்திகள்
இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் AI செயற்கை நுண்ணறிவு ?
கழிவுநீர் கால்வாயில் குதித்த ‘கதிரானவத்தை குடு ராணி’ – மடக்கிப் பிடித்த மட்டக்குளி பொலிஸார்.
வடக்கில் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துரைத்த ஆளுநர்!
அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! – வவுனியாவில் பரபரப்பு.
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குக! – பாதுகாப்புச் செயலாளரிடம் ஆளுநர் நேரில் கோரிக்கை.
யாழில் கட்டடம் அமைக்க கிடங்கு வெட்டியபோது சிக்கியது கைக்குண்டு.
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் – நாடு திரும்பிய பஸில் வலியுறுத்து.
IIHS பல்கலைக்கழக Bachelor of Business Administration இளங்கலைப் பட்டப்படிப்பு ஆரம்பமாகிறது
உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கையளிப்பு!
40 எம்.பிக்களுடன் எதிரணியில் அமர்வாரா நாமல் ராஜபக்ச எம்.பி.?
மைத்திரி போட்டியிட்ட சின்னத்தில் ரணிலும் களமிறங்க முடிவு? – சிங்கள ஊடகம் தகவல்.