குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ அதிகாரி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு குட்கா கிடங்கில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அமைச்சா்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கிடங்கில் வைத்து விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.
இந்த விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்டோரின் பெயா்களும் அடிபட்டன.
இந்த வழக்கு தொடா்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2021-ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு 19.7.2022-இல் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றும் காலஅவகாசம் கோரியும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இதே காரணத்தை இன்றைய விசாரணையின்போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சிபிஐயின் விசாரணை அதிகாரி வருகின்ற 21-ஆம் தேதி நேரில் ஆஜராக விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலதிக செய்திகள்
இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் AI செயற்கை நுண்ணறிவு ?
கழிவுநீர் கால்வாயில் குதித்த ‘கதிரானவத்தை குடு ராணி’ – மடக்கிப் பிடித்த மட்டக்குளி பொலிஸார்.
வடக்கில் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துரைத்த ஆளுநர்!
அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! – வவுனியாவில் பரபரப்பு.
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குக! – பாதுகாப்புச் செயலாளரிடம் ஆளுநர் நேரில் கோரிக்கை.
யாழில் கட்டடம் அமைக்க கிடங்கு வெட்டியபோது சிக்கியது கைக்குண்டு.
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் – நாடு திரும்பிய பஸில் வலியுறுத்து.
IIHS பல்கலைக்கழக Bachelor of Business Administration இளங்கலைப் பட்டப்படிப்பு ஆரம்பமாகிறது
உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கையளிப்பு!
40 எம்.பிக்களுடன் எதிரணியில் அமர்வாரா நாமல் ராஜபக்ச எம்.பி.?
மைத்திரி போட்டியிட்ட சின்னத்தில் ரணிலும் களமிறங்க முடிவு? – சிங்கள ஊடகம் தகவல்.