பாடசாலையில் தவறி வீழ்ந்து மாணவி சாவு!

பாடசாலையில் தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
கலவானை – மீபாகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8இல் கல்வி கற்று வந்த 13 வயதான மாணவியே நேற்று இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த மாணவி, வகுப்பறையில் இருந்து வெளியில் செல்லும்போது, கல் ஒன்றில் அவரது கால் சிக்குண்டுண்டதையடுத்துக் கீழே வீழ்ந்தார்.
இதையடுத்து அவர் கலவானை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.