புதுச்சேரி சிறுமி கொலை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கண்டனம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவா், நடிகா் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மேலதிக செய்திகள்
கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!
வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்மானம் தொடர்பில் முறைப்பாடு செய்ய இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
மருத்துவரான 3 அடி உயர இளைஞர்… உலகை திரும்பி பார்க்க வைத்த தன்னம்பிக்கை!
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வன்கொடுமை செய்த கல்பிட்டி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்.