வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் பெய்யக் கூடிய சில மழையைத் தவிர நாடளாவிய ரீதியில் வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.