இந்தியாவின் முதல் ரோபோ டீச்சர் – கேரள தனியார் பள்ளியில் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில், ரோபோ ஆசிரியை மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். இதனால், இந்த தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியும், தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ஐரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ ஆசிரியை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோ மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு, அவர்களது சந்தேகங்களுக்கும் விரைவாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியர் ரோபோ என்ற பெருமையை இந்த ஐரிஸ் ஆசிரியை ரோபோ பெற்றுள்ளது.
வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியுடன் 3 மொழிகளில் பல்வேறு பாடங்களில் இருந்து சிக்கலான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கல்வி உலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு