தம்பிலுவில் இருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவை

தம்பிலுவில் மத்திய சந்தையில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் தூர இடங்களுக்கான பஸ் சேவை ஆரம்பிப்பு
தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் திரு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களிடம் திருக்கோவில் பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இதுவரைகாமும் அக்கரைப்பற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவையானது இன்று முதல் திருக்கோவில் பிரதேசம் வரை விஸ்தரிக்க இலங்கை போக்குவரது சபை தலைவருடன் பேசி அதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளார்.இதற்கமைய இந்நிகழ்வானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இருந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது .இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் R.W.கமலராஜன்,திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திரு J.R.சத்தியசீலன்,கருணா அம்மானின் செயலாளர் திரு N.சிவா மற்றும் அக்கரைப்பற்று பேரூந்து சாலையின் பொறியியலாளர் திரு இ.பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிற்பித்தனர்.
Sathasivam Nirojan