திடீரென தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி – பதறிய அதிகாரிகள்! (Video)
பிரதமர் மோடி தமிழ் பெண் ஒருவர் காலை தொட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியில் முதன்முறையாக தேசிய படைப்பாளிகள் விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி நாட்டின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் போட் இணை நிறுவனர் அமன் குப்தாவுக்கு ‘செலிபிரிட்டி கிரியேட்டர் ஆஃப் தி இயர் விருதை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், கவிதாஸ் கிச்சன் ‘சிறந்த படைப்பாளர் விருதை’யும், ஆர்ஜே ரவுனக் ‘கிரியேட்டிவ் கிரியேட்டர் விருதையும்’ வென்றனர்.
தொடர்ந்து, சிறந்த கதைசொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த கீர்த்திகா கோவிந்தசாமி விருதை வாங்கும் முன்பு பிரதமர் மோடி காலை தொட்டு வணங்கினார். இதையடுத்து பிரதமர் மோடியும் பதிலுக்கு கீர்த்திகா கோவிந்தசாமி காலை தொட்டு வணங்கினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி எப்போதும் தனது காலில் மற்ற அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் விழுவதை அனுமதிக்க மாட்டார். பொதுமக்கள் யாராவது அவரது காலில் விழுந்தால், பதிலுக்கு மோடியும் அவர்கள் காலில் விழுவார். அதுபோன்ற ஒரு சம்பவமாக இதுவும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்த பொலிஸார் : பூசகர் உட்பட 8 பேர் கைது (Photos)
உக்ரைன் போர் : செல்வது பேரழிவை நோக்கியா?
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை