தனியார் விடுதியில் உணவருந்திய 76 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கிப் பயின்று வரும் மாணவர்கள் 76 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் புதுதில்லியையொட்டி அமைந்துள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வழங்கப்பட்ட உணவை அங்கு தங்கியுள்ள மாணவர்கள் நேற்றிரவு சாப்பிட்ட நிலையில், உணவு கெட்டுப் போயிருந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று(மார்ச். 8) மகா சிவராத்திரியையொட்டி, விரதமிருந்து வந்ததாகவும், அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நிலையில், மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலதிக செய்திகள்
வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்த பொலிஸார் : பூசகர் உட்பட 8 பேர் கைது (Photos)
உக்ரைன் போர் : செல்வது பேரழிவை நோக்கியா?
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
திடீரென தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி – பதறிய அதிகாரிகள்! (Video)