கஹந்தமோதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது.

கடந்த 6ஆம் திகதி ஹங்கம, கஹந்தமோதர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (08) காலை ஹுங்கம கட்டகடுவ குளத்திற்கு அருகில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 27 வயதுடைய ரன்ன பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.