செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
நேற்று (9) செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
71வது உலக அழகி கிரீடம் இந்தியாவின் மும்பையில் நேற்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போட்டியின் இரண்டாம் இடமாக லெபனானை சேர்ந்த யாஷ்மினா ஜைடவுன் தெரிவானார்.
போட்டியை தொகுத்து வழங்கிய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 வயதான சினி ஷெட்டி போட்டியின் முதல் 08 பேரில் தெரிவாகியமை விசேட அம்சமாகும்.
உலக அழகி பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 23 வயது. அவர் சட்டம், வணிக நிர்வாகத்தில் பட்டதாரி.
செக் குடியரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றது.