சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!
சட்டசபை நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி லோக் சத்தா கட்சி மாநில தலைவர் ஜெகதீஸ்வரன், தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் லைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற தகவல்களை சேகரித்து வருகிறோம்.
அதில் 7 மாநிலங்கள் நாங்கள் கேட்ட தகவல்களை வழங்கி உள்ளன. மீதமுள்ள மாநிலங்களிடமும் விளக்கங்களை பெற்ற பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,
“எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், 5 நிமிட தாமதமாகவாவது ஒளிபரப்பலாம்.
அந்த இடைவெளியில், அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டு கூட ஒளிபரப்பலாம்” எனக் கூறி விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலதிக செய்திகள்
வட்டுக்கோட்டையில் பயங்கரம் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை. (பிந்திய இணைப்பு)
கடந்த 24 மணித்தியாலங்களில் 1101 சந்தேக நபர்கள் கைது?