06 வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை மீறிய பூசகர் உட்பட 09 பேருக்கு பிணை இல்லை!

வவுனியாவின் பழமை வாய்ந்த வெடுக்குநாறிமலை கோவிலில் பொங்கல் விழாவை வலுக்கட்டாயமாக நடத்தி , நீதிமன்ற ஆணையை மதிக்காமை , பொலிஸ் கட்டளைக்கு கீழ்படியாமை மற்றும் பொதுமக்களை தூண்டிவிட்டமை எனும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகியுள்ள 9 சந்தேகநபர்களுக்கு , பிணை வழங்க வவுனியா நீதவான் இன்று (12) மறுத்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை 9 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பெரிய அளவிலான தியாகங்கள் அல்லது வளர்ச்சி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரி அன்று இரவு பொங்கல் விழாவை பாரியளவில் நடாத்தியதாக 6 வழக்குகள் போடப்பட்டு , கடந்த 8ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸார் 9 பேரை கைது செய்திருந்தனர்.
அவர்களை முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, மார்ச் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.