தேசிய மற்றும் மாகாண பாடசாலை அல்ல, அனைத்து பாடசாலைகளும் ஒரே தரத்துக்கு ……
தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகளை ஒரே மாதிரியான பாடசாலைகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் துறைசார் கண்காணிப்புக் குழுவில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் , ஒரேயடியாக இதனை நடைமுறைப்படுத்த முடியாத போதிலும் படிப்படியாக அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்த கொள்கை கட்டமைப்பின் ஊடாக இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார் .
கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் அறிவைப் புதுப்பிக்கும் திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றியமையாதது என்றும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் .
வகுப்பறையில் குறிப்பிட்ட பாடத்தின் ஒரு அலகை கற்பித்த பின்னர் பயிற்சிகளை வழங்கி புள்ளிகளை வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பல நாடுகளில் அந்த முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே
முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.
தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளை தரம் பிரிப்பதற்கு பதிலாக, ஒரே தரத்துக்கு ……
தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கவே இல்லை! – இப்படிக் கூறுகின்றார் பொன்சேகா.
மொட்டுவின் வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு.
போதைப்பொருள் வியாபாரி வாளால் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்.