பிரதமர் மோடி தமிழகம் வருகை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
லோக்சபா தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார்.
அண்மையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதனால், கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலதிக செய்திகள்
பாராளுமன்றத்தை கலைக்க 113 உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் ஆளும் கட்சி !
குடும்ப ஆட்சி இல்லையேல் மஹிந்தவே சிறந்த தலைவர் – பொன்சேகா சொல்கின்றார்.
கோட்டாவின் நூலால் பஸில் கடும் கடுப்பில் – ராஜபக்ஷக்களின் பேச்சாளர் உதயங்க தகவல்.
1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் – வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு!