யாழ். சாட்டி கடலில் மூழ்கி 11 வயது சிறுமி பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம், சாட்டி கடலில் நீராடிய சிறுமி ஒருவர் நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார்.
இந்தப் பரிதாப சம்பவம் இன்று (16) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.