ஐக்கிய மக்கள் சக்திக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவுமாம் – எஸ்.பி. ஆரூடம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவக்கூடும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்விரு கட்சிகளுக்கும் வாக்காளர்கள் அளிக்கும் 78 சதவீத வாக்குகளால் இந்தப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி 15 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும்.
அதேநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை 5 சதவீத வாக்குகளையே பெறும்.
அதேபோன்று புதிதாகக் களமிறங்கும் கட்சி மற்றும் எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் கட்சி ஆகியவை 2 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும்.” என்றார்.