இன, மத வெறிபிடித்தவர்களுக்கு எங்கள் கூட்டணியில் இடமில்லை – சஜித்தின் கட்சி திட்டவட்டம்.
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“இந்த நாட்டில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவோம். பலர் எம்முடன் இணைந்துள்ளனர். அனைத்து கட்சிகளில் இருந்தும் வருகின்றனர். சிவில் அமைப்புகளும் இணைந்துள்ளன. மேலும் பல தரப்பினரும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள், இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்குக் கூட்டணியில் இடமில்லை. இந்நாட்டில் உருவான பாரிய கூட்டணியாக எமது கூட்டணி அமையும்.” – என்றார்.