நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் : நாமல்.
மொட்டு கட்சியின் தீர்மானங்களை மேற்கொள்வதில் பசில் ரப்பக்ஷவுக்கும், நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் கேள்விக்குறியான நிலை காணப்படுவதாகவும் அந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு நாமல் ராஜபக்ஷ முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த பிரிவினையை தவிர்ப்பதற்கு முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலே ஒரே தீர்வு என நாமல் ராஜபக்ஷவுடனான குழுவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கட்சி சிதைந்து வரும் பின்னணியில் தற்போதுள்ள அமைப்புத் திறனைப் பயன்படுத்தி அதிக ஆசனங்களைப் பெறுவதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தனது கட்சியின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்தாலும், பெரும்பான்மையான மொட்டு எம்.பி.க்கள் கட்சியின் பிரேரணையை விரும்பவில்லை எனவும், அவ்வாறான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.