வவுனியாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.

வவுனியாவில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி (17) மாலை சென்ற கடுகதி ரயில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்தபோது ரயில் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே மரணமடைந்தவராவார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.