சுற்றுலாப் பெண் பயணி யானை தாக்கிச் சாவு! – பொத்துவிலில் சம்பவம்.

இத்தாலி நாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவர் பொத்துவில் – கோமாரியில் வைத்து யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் கோமாரி – களுகொல்ல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அவர் சகபாடிகளுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென்று வீதியால் வந்த யானை அவரை இழுத்து அடித்துக் கொன்றது. ஏனையவர்கள் தப்பியோடி விட்டார்கள்.
அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காகப் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
52 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தார்.