வருவது பொதுத்தேர்தலா ? ஜனாதிபதி தேர்தலா? அமைச்சரவைக்கு அறிவித்த ஜனாதிபதி!

ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
முதலில் நடத்தப்படுவது பொதுத்தேர்தலா ? ஜனாதிபதி தேர்தலா? என கதைகள் பரப்பப்படுவது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் , எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.