சரித ஹேரத், மரிக்கார் ஆகியோரும் கோப் குழுவில் இருந்து இராஜிநாமா.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள ஒருவரின் (ரோஹித அபேகுணவர்தன எம்.பி.) தலைமையின் கீழ் தம்மால் பணியாற்ற முடியாது எனவும், அதனால் தாம் குறித்த குழுவிலிருந்து விலகுகின்றார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் நேற்று கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.