தெற்கை போல வடக்கிலும் மத சுதந்திரம் இருத்தல் வேண்டும் – சஜித் (Video)
இந்த நாட்டில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களுக்கு மத சுதந்திரம் உள்ளதாகவும், அது மனித மற்றும் அடிப்படை உரிமை என்பதால், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் உள்ள இந்து ஆலய பூஜையில் ஈடுபட்டிருந்த குழுவினர் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போது, அவர்களுக்கு ஆதரவாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்பட்ட கருத்தைத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரா ஆலயத்தில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 8 பேர் கடந்த 8 ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதி, மதம், மொழி வேறுபாடின்றி மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருப்பதாகவும், அது ஒரு அடிப்படை மற்றும் மனித உரிமை என்றும், எந்த மத வழிபாட்டு தளமானாலும், மத வழிபாடுகளை நடத்த உரிமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக பௌத்த பன்சல, மசூதி அல்லது கோவிலாக இருந்தாலும், மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில், பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.