பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் எதுவும் பலனின்றி அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தேறிவிட்டார் என்ற மகிழ்ச்சியிலிருந்த அவரது ரசிகர்களும், திரையுலகினரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.